ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

                                                  ஸ்ரீவாலைதாய்வீடு.. 

                                                               வாலையம்மன் 



 ஓம் ஐம் க்லீம் சௌம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஆசை வடிவான பாசக் கயிற்றை ஏந்திய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் தீமையை பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிரும் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் மனமாகிய கரும்பு வில்லை உடைய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஐந்து புலன்களாலும் உணரப்படும் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஒலி தொடுகை உருவம் ரசம் மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும் ஐந்து மலர் கணைளாக கொண்ட அன்னையே போற்றி ஓம்
 
ஓம் ஐம் க்லீம் சௌம் பாசக் கயிற்றால் பிணைப்பவரும் பின் தனது அங்குசத்தால் வெட்டி எறிபவருமான அன்னையே போற்றி ஓம்

ஓம்ஐம் க்லீம் சௌம் தீர்க்கமான நீண்ட கண்களையுடைய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்க செய்யும் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் தன் கால் நகவொளியில் வணங்குவோர் அகத்துறைந்த இருளை போக்கும் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் தாயே உன் பாதகமல தூசியே வேத மங்கையின் வகிட்டு குங்குமம் போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி

: ஓம் ஐம் க்லீம் சௌம் ஆதியில் ஐந்தெழுத்தின் வாலை தாயே போற்றி ஓம்

ஓம்ஐம் க்லீம் சௌம் அந்தரி சுந்தரி வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஆதியந்த வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் இம்மை மறுமையை நீக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஈடில்லா ஞானமதை அளிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

 ஓம் ஐம் க்லீம் சௌம் இராச பாண்டி பெண்ணாம் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஊமை எழுத்தே உடலான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  எங்கும் நிறைந்த வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் எல்லா கலைகளையும் அறிந்த குரு வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஏற்றம் அளிக்கும் ஞான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஐந்தெழுத்தும் என்றும் பேரான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஒளிவுதனில் ஒளிவு உறுதி தரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம்ஐம் க்லீம் சௌம்  ஓசை மணி பூரமதிலுதிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஐம் க்லீம் சௌம்  ஔவைக்கும் கவிநாத மீந்த வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  அஃறிணைக்குள்ளும் நாத வடிவ வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  தெளிவு தனில் தெளிவுதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் சிவமயமும் காட்டுவிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  நல்லவழி ஞானங் கூட்டும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் மகத்தான வேதாந்த சித்திதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் உற்பனத்தில் உற்பனமாய் உறுதிதரும்  வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் வெளியதனில் வெளியாகி நாதரூப வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  விளங்கிநின்ற வாலையாம் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஆதியந்தம் வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் சோதியந்த நடுவீடு பீடத்தமர்ந்தாய் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் பாதிமதி சூடியதோர் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் பத்துவயதுமான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  காமி வெகு சாமி சிவகாமி ரூபி தாயே தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் கற்புடைய பெண்ணரசி வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் தேனென்ற மொழிச்சி தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் தேகமதில் அமிர்தமூட்டும் தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் ஊனென்ற உடலுக்குள் நடுவான தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் உத்தமியாள் பத்து வயதான தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  பஞ்சவண்ணமாகி நின்ற பிராபரை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  அண்டரோடு முனிவர்களும் போற்றும் தாயே போற்றி ஓம்

ஓம்  ஐம் க்லீம் சௌம்  சூட்சமிவள் வாசமது நிலைத்த வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  தேசமதில் போய் விளங்கு மிந்த வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  சித்தாந்த சித்தரவர் தேடும் வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஓகோகோ அதிசயங்களுள்ள வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஆசுகவி மதுரமது பொழியிம் வீடே  போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  அவனருளும் கூடி விளையாடும் வீடே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல் திறக்க வேணும் தாயே ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் சித்தர்கள் போற்றும் தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  வாயு மனமுங் கடந்த மனோன்மணி தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  பேயுங் கணமும் பெரிதுடைப் பிள்ளை போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஆயும் அறிவும் கடந்த அரனுக்கு தாயும் மகளும் தாரமுமானாய் போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் சக்தி என்ற ஒரு சாதக பெண்பிள்ளையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  முக்தி அளிக்கும் நாயகியே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஓங்காரி என்னும் ஒரு பெண்பிள்ளையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் நீங்காத பச்சை நிறம் உடையவளே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஆங்காரியாகிய ஐவரை பெற்றவளே போற்றி ஓம்

ஓம்  ஐம் க்லீம் சௌம்  ரீங்காரத்துள் இனித்திருந்த வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  உற்பனமான ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  முச்சுடரான விளக்கான வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  தாய்வீடு கண்ட வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  சிரித்து மெல்ல புரமெரித்த வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஒருத்தியாக சுடர்தமை வென்ற வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்   கொடுஞ்சூலி திரிசூலி வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஆயுசு கொடுக்கும் வாலையே போற்றி ஓம்

ஓம்  ஐம் க்லீம் சௌம்  நீரழிவு போக்கும் வாலையே போற்றி ஓம்

: ஓம் ஐம் க்லீம் சௌம்  சத்தி சடாதரி வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  மாலின் தங்கையே வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  சோதிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஆண்டிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  இராச பாண்டி பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் அந்தரி சுந்தரி வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  வல்லவள் அம்பிகை வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  தொல்லை வினை போக்கும் வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  அரிக்குள் நின்ற ஐந்தெழுத்தாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஆதியில் ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் நாதியில் ஊமை எழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஊமை எழுத்தே உடலான வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  ஓம் என்ற எழுத்தே உயிரான வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  செகம் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் சீவன் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
 பங்கய வாசனப் பாலை கமலைப் பராசக்தியே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  மனதை அழித்து ஞானம் அளிக்கும் மனோண் மணியே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  நித்ய யௌவனா வாலை பருவ பராசக்தியே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  எனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  எனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம்  எனும் ஓங்காரத்துள்ளே பல பேதம் ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் எனும் ஓங்காரமாக ஓண் முத்தி சுத்தியான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐம் க்லீம் சௌம் செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவமே வாலை தாயே போற்றி ஓம்

ஓம் க்லீம் சௌம் அங்கை நான்கில் வரதாபய மணிபக்க வடம் துங்க நற்புத்தகம் தாங்கிய செந்தாரணியே வாலை தாயே போற்றி ஓம்